மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட கழகம் – மாங்காடு நகரக் கழகச் செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான பட்டூர் எஸ்.ஜபருல்லா, இன்று நடைபெற்ற அவருடைய மகளின் திருமண விழாவின் போது, திமுக இளைஞர் அணி அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
சென்னை திருவேற்காட்டில் நடந்த இந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் த.மோ.அன்பரசன் மற்றும் ஆவடி நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். மேலும் முதல்வரின் சாதனையை கூறினால், 200 அல்ல 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், தற்போது நடக்கும் திருமணங்களில் ஜாதி பெயரை தவிர்த்து மணமக்கள் பெயரின் பின்னால் படிப்பின் பட்டத்தை போடுவது பெருமையாக உள்ளதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





