ஹிந்தியில் கேள்வி கேட்ட ரசிகர்… இயக்குநர் மணிரத்னம் கொடுத்த அதிரடி ரிப்ளை..!
தக் ஃலைப் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ஹிந்தியில் கேள்வி கேட்ட ரசிகருக்கு இயக்குநர் மணி ரத்னம் கொடுத்த அதிரடி ரிப்ளை தொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்.’ இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் அனல் பறக்கும் வசனங்களும், அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பாலைவனம், பனிமலை காட்சிகளும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் டிரைலரில் மிரட்டலாக உள்ளது. டிரெய்லரில் உள்ள கமல் – சிம்பு இடையேயான மோதல் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “ஜிங்குச்சா… ஜிங்குச்சா…” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் நடந்த இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா என படத்தில் நடித்துள்ள நட்சத்திர பட்டாளங்கள் அனைவரும் கலந்து கொண்டு கலகலப்பாக உரையாடினர்.
இதே நிகழ்வில் நடிகை அபிராமி உணர்ச்சி வயப்பட்டு கண்கலங்கினார். டிரைலரில் இடம்பெற்ற வசனத்தை, மேடையில் பேசி கைத்தட்டல்களை அள்ளினார் சிம்பு. அதே வசனத்தை தன்னுடைய பாணியில் பேசி அரங்கை அதிரவைத்தார் கமல்ஹாசன்.இந்நிலையில், தக் ஃலைப் பட புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு ரசிகர்கள் எழுந்து இயக்குநர் மணிரத்னத்திடம் ஹிந்தியில் பேசுமாறு கூறினார்.
அதற்கு மணிரத்னம், “நான் சாதாரணமாக ஹிந்தியில் பேசுவதை கேட்டால் அதன் சப்டைட்டிலை தான் கவனிப்பேன்.” என கலகலப்பாக பதில் அளித்துள்ளார். அவரது பேச்சை கேட்டு ஒட்டுமொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது. இதன்பிறகு அந்த ரசிகரும் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அதற்கு மணிரத்னமும் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




