தமிழகத்தில் 77 நீதிபதிகள் பணி இடமாற்றம்..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




