லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதிக்குட்பட்ட இடையம்பாளையம் பகுதியில் சிட்டாவில் பெயர் சேர்க்க 7000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இடையம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் உதவியாளர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




