மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!
சர்ச்சை பேச்சுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரியுள்ளார். தமிழ்நாட்டு எம். பிக்கள் நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தர்மேந்திர பிரதான், யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கோருகிறேன் என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




