--- --:--:-- --

75 வது அரசியலமைப்பு தினம்..நாடு முழுவதும் கொண்டாட்டம்..!

6

நாடு முழுவதும் 75 ஆவது அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சட்ட மேதை அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி 75 ஆவது ஆண்டு அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறும் விழாவில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

 

உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை நடைபெறும் அரசியல் சாசன திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon