குற்றாலம் மெயின் அருவியில் 4 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி..!
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க நான்கு நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவிகயில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது தண்ணீர் வரத்து சீரானதையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





