--- --:--:-- --

செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை..மருத்துவமனை முன்பு திடீர் போராட்டம்..!

8

ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது தாக்குதல் நடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்து நாகை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருச்சி மாவட்டம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் பணி முடிந்து வீடு திரும்பிய பொழுது அவரது மீது சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற வார்த்தை பாதிக்கப்பட்டவருக்கு செவிலியருக்கு நீதி கிடைக்க வேண்டும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon