ரத்தம் சொட்ட சொட்ட இரயில்வே நிலையத்தில் நடந்த பயங்கரம்..!

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தடைந்த பொழுது போதை ஆசாமி ஒருவர் ரயில்வே கேபினில் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் ரயில் நாற்பது நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

 

கையில் இருந்து ரத்தம் சொட்டுவதையும் பொருட்படுத்தாமல் மதுபோதையில் கலாட்டா செய்த கிருஷ்ணகுமார் என்ற அந்த இளைஞனை ரயில்வே போலீசார் கீழே தள்ளி துணியால் அவனது இரு கைகளையும் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.