--- --:--:-- --

மாணவிகளுக்கு நடந்த கொடூரம்..தலைமை ஆசிரியரை வகுப்பறையில் வைத்து பூட்டிய சக ஆசிரியர்கள்..!

7

கிருஷ்ணகிரி அருகே மாணவிகளை தலைமை ஆசிரியர் தாக்கியதாக கூறி பெற்றோர்கள் பள்ளிக்கு வர தொடங்கியதால் தலைமை ஆசிரியரை சக ஆசிரியர்கள் வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் செவனப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியின் 187 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ரகுநாத் என்பவர் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அரசு பள்ளி முன்பு அதிக அளவில் வர துவங்கினர். இதனை கண்ட சக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை பாதுகாப்பிற்காக வகுப்பறையில் பூட்டி வைத்து போலீசருக்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியரிடம் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் மாணவிகளிடம் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon