மாணவியிடம் காம முகத்தை காட்டிய கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேந்திரய வித்யாலயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார், நாகர்கோவில் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக ராஜஸ்தானை சேர்ந்த ராமச்சந்திர சோனி பணியாற்றி வந்தார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய பள்ளி தலைமை ஆசிரியை சோனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அத்துடன் இது குறித்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்க தகவல் கொடுத்தார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் ராமச்சந்திர சோனியை கைது செய்தனர். மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் ஆசிரியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





