சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..பள்ளி சூறையாடல்..!
மகாராஷ்டிராவில் சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதால் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் பட்லாப்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் துப்புரவு தொழிலாளியால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த பெற்றோர் காவலாளர்களிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவலர்கள் துப்புரவு தொழிலாளியை கைது செய்தனர். பள்ளியில் உரிய பதிலளிக்காததால் பெற்றோர்கள் பள்ளியை அடித்து உடைத்து சூறையாடினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





