--- --:--:-- --

வேட்பு மனு நிராகரிப்பு..முதியவர் எடுத்த முடிவு..!

5

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் முதியவர் ஒருவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பத்து ரூபாய் நாணயங்களை செய்து தேர்தலில் போட்டியிட்டார்.

 

இதனால் விக்கிரவாண்டி தேர்தலிலும் போட்டியிட அளிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டார். நிகழ்விடம் விரைந்த காவல்துறை முதியவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

 

மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராஜேந்திரன் தீயணைப்புத்துறை உதவியுடன் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon