பள்ளி திறந்த முதல் நாளிலேயே ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பான்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கண்ணன்.

 

பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி முதல் நாளாக இன்று கண்ணன் அவரது பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இடைமறித்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் டிஎஸ்பி இளஞ்செழியன் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தகவல் அளித்ததன் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.