கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஆபத்து தான்..!
கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
கொரோனா பெருந்தொற்றை கடந்துவிட்ட நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அந்த வரிசையில் தற்பொழுது கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவுகள் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தடுப்பூசி போட்டவர்களில் முப்பது சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





