கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? திருப்பத்தூரை அலறவிட்ட ஸ்கேன் சென்டர்..!
திருப்பத்தூரில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சட்டவிரோதமாக ஸ்கேன் செய்த சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. ஐயப்பனும் அவர் மனைவி கங்காவும் வீடு வாடகைக்கு எடுத்து ஸ்கேன் சென்டர் நடத்தி வந்துள்ளனர்.
மருத்துவ இணை இயக்குனர் கண்ணகி மற்றும் மருத்துவ குழுவினர் ஐயப்பனின் ஸ்கேன் சென்டரில் நேற்று மாலை திடீரென ஆய்வு நடத்தினர். இதையடுத்து ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த கணவன் மனைவி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





