ஆபத்தான முறையில் கண்டெய்னர் லாரியில் பயணிக்கும் மாணவர்கள்.. அதிர்ச்சி வீடியோ..!
காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் கண்டெய்னர் லாரியின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதை அந்த வழியாக சென்ற நபர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





