ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியை பாராட்டி வைரலான பெண் தற்கொலை..!
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பாராட்டியதற்காக வைரலான பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கீதாஞ்சலி என்பவர் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஜெகன் ஆட்சி வீட்டுத் திட்டத்தின் கீழ் நிலம் பெற்றார். இதற்காக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை அவர் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவை பகிர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஸ்டார் பரப்புரையாளர் என குறிப்பிட்டு இருந்தார். அதே சமயம் அந்த பெண்ணை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனாவுடைய அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இணையத்தில் கடுமையாக வசை பாடினார்.
இதனிடையே கீதாஞ்சலி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை தளபதி தேசம் கட்சி பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்ததே தற்கொலைக்கு காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





