திருமலை பக்தர்களுக்கு புதிய சேவை.. ரூ.3 கோடிகளுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்திய தேவஸ்தானம்..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதையில் செல்பவர்களின் உடைமைகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டு சென்று சேர்த்து திரும்பி தர நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது.

 

மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நவீன மின்னணு முறை திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். qr கோடு முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இதே போல தரிசனத்திற்கும் கோவிலுக்குள் செல்லும் முன் பக்தர்களின் செல்போனை பாதுகாத்து வைத்து விரைவாக திரும்பப்பெறும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். திருமலைக்கு வரும் பக்தர்களின் 60,000 செல்போன்களையும், நாற்பதாயிரம் பைகளையும் தேவஸ்தான நிர்வாகம் தினசரி கையாள்வது குறிப்பிடத்தக்கது.