தென்மேற்கு பருவமழை ஜூன் நான்காம் தேதி கேரளாவில் தொடங்கும்..!
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவது இந்த முறை சற்று தாமதமாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் ஆனால் இந்த முறை அது ஜூன் நான்காம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாமதத்தால் ஒட்டுமொத்த பருவ மழையின் அளவு பாதிக்கப்படாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





