நடு ரோட்டில் நடனமாடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்..!
இன்ஸ்டாவில் லைக்குகளுக்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் டிராபிக் ஏற்படுத்தும் வகையில் நடனமாடிய இளைஞர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை அண்ணா சாலைகளில் சாகசம் மேற்கொண்ட நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதுபோல் சென்னையில் ஒருவர் பிராட்வே பேருந்து நிலையம் சௌகார்பேட்டை மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ரீல்ஸ் செய்திருக்கிறார்.
இதனை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பாடு இருப்பதாக கூறுவதோடு பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் எனக் கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





