திருப்பூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா – 2023
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து கடந்த 1 44 ஆண்டு காலத்தில் இரண்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன . தாராபுரத்தில் நடத்தப்பட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 793 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது .
கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கயத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 204 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 2401 வேலை நாடுநர்களை தேர்வு செய்தனர் . ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே சிறு அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன .
இந்த சிறு அளவு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் கடந்த 18 மாதங்களில் சுமார் 1800 நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர் . வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் வகையில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம்களை வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது . மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு நிறைவுற்ற உடன் உதவித் தொகை வழங்கப்படுகிறது .
TNPSC , SSC , RRB போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது . தற்போது கூடுதலாக உடுமலைப்பேட்டையிலும் பயிற்சி மையம் துவங்கப்பட்டு உள்ளது .

TNPSC – Group 1 , Group -II , IBPS , SI போன்ற தேர்வுகளில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பணியாளர்களாக சேர்ந்துள்ளனர் . மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து அரசு மற்றும் தனியார் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினீத் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வைத்தார் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை இயக்குனர் மீனாட்சி ஆகியோர் வேலை வாய்ப்பு குறித்த விளக்கி சிறப்புரை ஆற்றினர்கள்.
முடிவில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார். விழாவில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மண்டல தலைவர்கள் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஷ்குமார் போதை ஒழிப்பு உறுதிமொழியை கூற கூட்டத்திலிருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




