ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்டால் ரூ.10,000 அபராதம்..!

ணவகத்தில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்ட நபருக்கு உணவகம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சாலையில் உள்ள மெக்டொனல்ஸ் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஒரு நபர் தனது சகோதரரை சந்தித்து உணவருந்தியுள்ளார்.

 

அவர்கள் சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க வந்த பொழுது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மெக்டொனல்ஸ் சாப்பிட 90 நிமிடங்கள் தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி அவர் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால் பத்தாயிரம் ரூபாய் அபராதமாக விரிக்கப்பட்டது.

 

இது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதுவரை எந்த உணவகத்திலும் 90 நிமிடங்கள் மட்டுமே சாப்பிட அனுமதி என எந்த அறிவிப்பு பலகை இல்லை எனவும் உணவை அவசரமாக சாப்பிட தாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.