--- --:--:-- --

காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தோணியின் மகன் கட்சியிலிருந்து விலகல்..!

3

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் கேரள முதலமைச்சருமான அந்தோணியின் மகன் அனில் அந்தோணி காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவண படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனில் அந்தோணி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தால் வெளிநாட்டு அமைப்புகள் இந்தியாவின் உள் விவகாரம் பற்றி பேசுவது தவறு சக அரசியல் கட்சியினர் இவற்றை ஊக்கவிக்க கூடாது என அனில் அந்தோணி பதிவிட்டு இருந்தார்.

 

இதனிடையே ட்விட்டர் பதிவை நீக்க கோரி கட்சி மேலிடம் வற்புறுத்துவதாகவும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் கட்சியில் இத்தகைய வற்புறுத்தல்களை எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ள அணில் அந்தோணி காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்வதாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon