நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
டெல்லியிலிருந்து நாசிக்கிற்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லியில் தரை இறங்கியது. டெல்லியிலிருந்து காலை 7 மணி அளவில் 400 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் மகாராஷ்டிராவின் நோக்கி பறந்தது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஆட்டோ பைலட் என்று அழைக்கப்படும் தானியங்கு விமானி செயற்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் தொடர்ந்து பழுதடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




