மதுபோதையில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள்..!
கரூரில் அரசு பள்ளி சீருடை அணிந்து மதுபோதையில் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகளின் செயல் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்தனர்.
இதனையடுத்து 3 மாணவிகளும் பசுபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள் மது அருந்தி விட்டு போதையில் இருந்துள்ளனர். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





