--- --:--:-- --

வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு..!

8

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. இது தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானது. அதை அடிப்படையாக கொண்டு இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

 

வழக்கை விசாரித்து ஒரு மாத காலத்திற்குள் 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon