--- --:--:-- --

கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு..!

3

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருக்கின்றது.

 

நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதலாக மிக கனமழை வரையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon