பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர்
வேலூர் மாவட்டம். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் சுமார் 30க்கும் மேற்பட்ட மனுதாரர் வந்து செல்கின்றனர் இதில் லஞ்ச பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தனியாக சென்று வேலையை முடித்துக் கொடுக்கும் நிலை உருவாகி உள்ளதாம்.
இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக காட்பாடி வட்டம். கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த பவிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் காலாம்பட்டு, திருவலம், கலசமங்கலம், தாராபடவேடு, என கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய இடங்களில் எல்லாம் இவர் மீது லஞ்ச புகார்கள் உள்ளதாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இது சம்பந்தமாக விஏஓ பவிதா பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் விசாரித்த போது உண்மை தகவல்கள் கிடைத்தது என்னவென்றால் இவரது லஞ்ச ஊழல்கள் எப்படி என்று பார்ப்போம் பொதுமக்கள் விஏஓ அலுவலகத்திற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5000 கண்டிஷன் பட்டாவை அயன் பட்டாவாக மாற்ற வேண்டும் என்றால் ரூ.20,000 பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய 25 ஆயிரம்.
வாரிசு சான்றுக்கு ரூபாய் 5000, பட்டா இடம் சர்வே செய்து அளந்திட. அடங்கல் சிட்டா தருவதற்கு கணிசமாக ஒரு தொகை, பெறுவதுடன் சாதி. வருமான. இருப்பிட சான்றிதழுக்கு ரூ. 500 என விஏஓ பவிதாவின் தினசரி வசூல் வேட்டையாம் ஒரு விஏஓ வின் தினசரி வருமானம் ரூ. 20,000 வரை வாங்கி வருகிறாராம், என சமூக ஆர்வலர்கள் இப்படி வாங்கும் லஞ்சம் விஏஓ அலுவலகத்தில் ஆரம்பித்து பட்டா மாறுதல் வாரிசு சான்றிதழ்கள் விஏஓக்களோ வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று வேலை முடித்து தருகிறோம் என்று ஒரு கணிச தொகையை பெற்றுக் கொண்டு புரோக்கர்களாக வேலை பார்த்து வருகிறாராம்.
கிராம நிர்வாக அலுவலர் பவிதா என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மேலும் கிராமப்புறங்களில் வேதனையில் வாடும் மக்களின் துயரத்தை தீர்க்கப்படுமா லஞ்சத்தை வாரி குமிக்கும் பேய்க்களிடம் இருந்து காப்பாற்றப்படுமா என சமூக ஆர்வலர்கள் வேதனையை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சமீப காலங்களில் அரசு அலுவலகங்களில் கையிட்டு பெற்றுக் கொண்டு சிறைக்கு சென்ற ஒரு சில அதிகாரிகளின் பட்டியல் திருவண்ணாமலை. புதுமல்லவாடி வருவாய் ஆய்வாளர் ஷாயஜிபேகம், முதியோர் உதவித்தொகை பெற பரிந்துரை செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கி கையும் காலுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.
காங்கயம் வட்டாட்சியர் சிவகாமி ரூ. 60.000 லஞ்சம் வாங்கி கையும் காலுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார், விழுப்புரம் குமளம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல் திருச்சி மணப்பாறை வட்டாட்சியர் மற்றும் வாகன ஓட்டுநர் லஞ்சம் வாங்கி கையும் காலுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்கள். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஆண் அதிகாரிகள் காட்டிலும் பெண் அதிகாரிகள் காட்டிலும் அதிகமாக லஞ்சம் வாங்கி வருகிறது இதிலிருந்து தெரிகிறது.
ஏன் என்றால் நகை,பணம், சொகுசு கார்கள், சொகுசு பங்களா கட்ட வேண்டும் என்பதற்காக ஆசைப்பட்டு அதிக லஞ்சம் வாங்கி கையும் காலுமாக சிக்கிக் கொள்கிறார்கள். வேலூர் மாவட்டம். காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட தாராபடவேடு விஏஓ பவிதா எப்பொழுது லஞ்ச ஒழிப்பில் சிக்குவார்.? அல்லது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் விஏஓ பவிதாவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




