புதுச்சேரியில் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
விபத்துக்குள்ளாகும் வாகனங்களை உரிய ஆவணங்களின்றி ஓட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை தடுக்க போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு வாகனம் ஓட்டினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






