டெல்லியில் நாளை முதல் பள்ளிகளை மூட உத்தரவு..!
காற்று மாசு குறையாததால் டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியிருக்கிறார்.
முன்னதாக காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு நிறைந்திருக்கும்போது பள்ளிகளை எதற்காக திறந்தீர்கள் என்று டெல்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
பெரியவர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரிய சொல்லி விட்டு குழந்தைகளை மட்டும் ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்து பக்கம் பக்கமாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்த மத்திய மாநில அரசுகள் நடைமுறையில் எதையுமே செய்யவில்லை என்று கூறினார்.






