சாலையோரம் கிழிந்து கிடந்த ரூபாய் நோட்டுக்கள்..!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் லக்ஷ்மநாராயணன் நகர் பிரிவு சாலை அருகே ரூபாய் நோட்டுகள் கிழிந்து கிடந்தன. இதனை பார்த்த சிலர் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் போலீசார் சென்று பார்த்த பொழுது 10, 20, 5, 2 மற்றும் 1 ரூபாய்கள் கிழிந்து கிடப்பது என்பது தெரியவந்தது. யாரோ வீட்டை காலி செய்த போது அவர்கள் பழைய பொருட்களை வீசி சென்றதுடன் கிழிந்த ரூபாய் நோட்டுகளையும் சாலையோரம் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.






