--- --:--:-- --

தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடத்தில் அனுமதி..!

3

தமிழகத்தில் மக்கள் கூடும் மார்க்கெட், தியேட்டர், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுமென உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் நவம்பர் இறுதிக்குள் முதல் தடுப்பூசி 100% என சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. தடுப்பூசி முகாம் வாயிலாக தடுப்பூசி போடும் பணி வரும் நிலையில் தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

 

அதிலும் பொது இடங்களில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவற்றினை முறையாக கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon