இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம் – மல்லிகா ஷெராவத்
தனக்கு கொடுமை நடந்ததால் தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியேறியுள்ளார். அண்மையில் மல்லிகா ஷெராவத் அளித்த பேட்டியில் கடந்த காலங்களில் கவர்ச்சியாக நடித்ததால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானதாகவும் அதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் எனவும் கூறியுள்ளார்.
என் வாழ்க்கையில் இவ்வளவு எதிர்ப்பு தேவையில்லை என முடிவு செய்து தான் நாட்டை விட்டு வெளியேறினேன் எனவும் அவர் கூறியுள்ளார்.






