பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
கொரொனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும் அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் விரிவாக பேச உள்ளனர்.
அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த இரண்டு ஆலோசனை கூட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




