ஆண் குழந்தையை 3 லட்சத்திற்கு விற்ற தாய்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆண் குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சரத்குமார் பவானி ஆகிய இருவரும் காதலர்கள்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனால் சரத்குமார் அங்கேயே சென்று திருமணம் செய்து கொள்ளாமல் இணையராக வாழ்ந்து வந்தனர். இதனால் அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் தனது குழந்தையை கடத்தி விற்று விட்டதாக வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் குழந்தையை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக தந்தை சரத்குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சரத்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னையும் சேர்த்து மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து தாய் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்யாமல் குழந்தையை பெற்றெடுத்த தாய் தந்தையரை குழந்தையை விற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






