தேர்தல் ஆணைய குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகை..!
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தல் களம் சூடு பிடித்து விட்ட நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் தலைமையிலான உயர் நிலை குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளனர்.
அதனை தொடர்ந்து வருமானவரித் துறை பொறுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். நாளை காலை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் அமலாக்கத் துறையினர் டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசிக்கின்றனர்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரிக்கு சென்று அங்கும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர்.






