மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 17 மாணவர்கள் காயம்..!
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மரத்தடியில் மாணவர்கள் பயின்ற பொழுது திடீரென மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர்.
இதைப்போல் திருவள்ளுவர் அரசு பள்ளிகளும் மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலூர் தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. போதிய கட்டிட வசதி இல்லாத காரணத்தால் 8,9 மற்றும் 10 ஆகிய வகுப்புகள் பள்ளியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து நடத்தப்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
தற்பொழுது அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் மதியம் நடைபெற உள்ள தேர்வுக்காக ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் வேரோடு சாய்ந்து மாணவ மாணவியர் மீது விழுந்தது.
இதில் 12 மாணவர்கள் ஐந்து மாணவிகள் என 17 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. முதல் உதவிக்கு பின் அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை தலைமையில் வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருவானூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கிளை உடைந்து விழுந்து பள்ளி மாணவர்கள் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் 30 பேர் அரசு மரத்தடியின் கீழ் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது மாணவர்கள் மீது மரத்தின் கிளை விழுந்தது. இதில் மாணவர்கள் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





