சபரிமலை கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது..!

புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.

 

கொரொனா கட்டுப்பாடுகள் காரணமாக வார நாட்களில் 2000 பக்தர்களும் வாரயிறுதியில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு இதே நாளில் சபரிமலையில் வருமானம் 150 கோடியாக இருந்த நிலையில் பக்தர்கள் வருகை குறைக்கப்பட்டதால் தற்போது வெறும் 9 கோடி ஆக சரிந்துள்ளது.

 

பக்தர்கள் வருகை குறைவாக இருந்தபோதிலும் சபரிமலையில் மண்டல பூஜை வழக்கமான முறைப்படி நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளா பார்த்தசாரதி ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 453 கிலோ எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு இன்று சாத்தப்பட்டு நண்பகலில் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

 

அதன்பின் இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி நடை மீண்டும் திறக்கப்படுகிறது.