பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், திமுகவை பாராட்டி பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நிலம் வாங்கியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக என்பதை எங்கேயும் குறிப்பிடவில்லை. Ex IPS என்றே குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுந்துள்ளது.