நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது.
அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ. 89,440க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களுக்கும் மேலாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390க்கும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.164க்கும் ஒரு சவரன் ரூ.1,64,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






