10, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்..!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

பூவிருந்த வள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து வீடு தேடி சென்று பரிசு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.