மணமகளை அழைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்..!

ராஜஸ்தானில் மணமகளை அழைத்து வர சென்ற கார் பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மணப் பெண்ணை அழைத்து வருவதாக மணமகன் உள்பட 9 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உயிரிழந்த நிலையில் 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மணமகளை அழைத்து வர சென்ற கார் விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.