கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து திருட சென்ற கொள்ளையர்கள் உணவு சமைத்து உண்டு, பொருட்கள் இல்லாததால் 3 பக்க கடிதம் எழுதிவைத்து சென்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாண்டியா மாவட்டத்தில் அரசு அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்த கொள்ளையன் அங்கன்வாடியில் திருடுவதற்கான பொருட்கள் இல்லாததால் ஆத்திரத்தில் அங்கிருந்த பொருட்களை வைத்து உணவு சமைத்து சாப்பிட்டு மூன்று பக்கத்திற்கு தன்னை பற்றிய குறிப்புகளை எழுதி வைத்து விட்டுச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






