பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்கள்..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பள்ளி மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் சகமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

 

அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களின் புத்தகங்கள் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த புத்தகங்களை அதே பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருடியதாக கூறி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தமது உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்துசென்றனர்.