தமிழகத்தில் 11 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கியுள்ளன. 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. இதைப் போல 11ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கு முன்பாக மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் செய்முறை தேர்வுக்கும் , பொது தேர்வுக்கும் இடையிலான இடைவெளி சில நாட்களே இருப்பதால் அதை முன்கூட்டியே நடத்த வேண்டும் என மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பின் அந்த கோரிக்கையை ஏற்று தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. இந்த செய்முறை தேர்வுகள் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது.






