திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் சிக்னல் அருகே, “அம்மா ஆட்சி வேண்டும், கழகம் ஒன்றிணைய வேண்டும்” என வலியுறுத்தி, “அதிமுக உண்மை தொண்டர்கள்” என 11 குறிப்பிடப்பட்ட பதாகைகள் ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி வரும் வழியில் நிகழ்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பிளவுகள் நீங்கி, கழகம் ஒன்றுபட வேண்டும் என முழக்கம்மிட்டனர்.