நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.
சிதம்பரம் மாநகராட்சி 4வது தெருவில் உள்ள பெண்களுக்கான வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி ஒன்பதாவது வார்டு வாக்குச்சாவடி எண் 13 இல் மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் இடைக்கோடு பேரூராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி மையத்தில் வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி வாக்குச்சாவடியில் 2 ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறால் வாக்குப்பதிவு தாமதம் ஆகியுள்ளது.







