சென்னையில் திருமணம் ஆகாமல் காதலுடன் சேர்ந்து வாழ்ந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்ய நினைத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன் காதலியை எரித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுகார்பேட்டையில் துணிக்கடை நடத்தி வந்த 40 வயது சந்தீப் கருத்து வேறுபாட்டால் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இலச்சி என்ற 35 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இலச்சி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத சந்தீப் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் செல்வதற்காகப் புறப்பட்ட இலச்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
ஆத்திரத்தில் கொலை செய்த சந்தீப் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






