விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள வராக நதி பாலத்தில் புதன்கிழமை அதிகாலை சுமார் 2.45 அளவில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. அப்போது சென்னையில் இருந்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டுநர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சுங்கச்சாவடி நிர்வாகம் விக்கிரவாண்டி காவல்துறை மற்றும் வனத்துறை ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் மற்றும் வனத்துறை சரகர் அருள் சோதி, வானவர்கள் குணசேகரன், சுகுமார் ஆகியோர் விரைந்து வந்து இறந்து கிடந்த சிறுத்தை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இப்பகுதியில் வனங்களோ, அடர்ந்த காடுகளோ இல்லாத நிலையில் சிறுத்தை வழித்தவறி, வந்ததா அல்லது யாரேனும் வேறு எங்கோ அடித்து இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்று உள்ளனர்களா என்ற கோணத்தில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களாக மயிலம் ஒன்றித்துக்குட்பட்ட ரெட்டணை, திண்டிவனம் அருகே வெள்ளி மேடு பேட்டை, கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகளை மர்ம விலங்கு தாக்கி பல சம்பவங்களில் பல ஆடுகள் இறந்துள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, வனத்துறையும் விசாரித்து வருகின்றனர், இந்நிலையில் சிறுத்தை ஒன்று விக்கிரவாண்டி அருகே இறந்திருப்பது அந்த மர்ம விலங்கு இதுதானா என்ற கோணத்தில் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
சிறுத்தை இறந்தது எப்படி என்பதை வனத்துறை பிரேத பரிசோதனை செய்து அதன் முடிவில் தான் தெரிய வரும் என வனத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.






